பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

3வது நாளாக சரிந்த பங்குச் சந்தை! ஐடி பங்குகள் உயர்வு!

இந்திய பங்குச் சந்தை வணிகம் 3வது நாளாகத் தொடர்ந்து சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் தொடங்கி பின்னர் சரிந்தது.

News image
கோப்புப் படம்
Updated On :23 அக்டோபர் 2024, 11:42 am

DIN

இந்திய பங்குச் சந்தை வணிகம் 3வது நாளாகத் தொடர்ந்து சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிந்தன.

ஐடி துறை பங்குகள் உயர்வுடனும், பார்மா துறை பங்குகள் சரிவுடனும் இருந்தன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்த நிலையில், உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கி மேலே சென்றது. எனினும், பங்குகள் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியதால் சந்தை சரிவுடன் நிறைவடைந்தது.

9 நிறுவனங்களின் பங்குகள் உயர்வு

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 138.74 புள்ளிகள் சரிந்து 80,081.98 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.17% சரிவாகும்.

ஆரம்பத்தில் 79,921.13 புள்ளிகளுடன் தொடங்கிய சென்செக்ஸ், 79,891.68 புள்ளிகள் வரை சரிந்தது. எனினும் இன்றைய அதிகபட்சமாக 80,646.31 புள்ளிகள் வரை உயர்ந்தது. வணிக நேர முடிவில் 138 புள்ளிகள் சரிந்து 80,081.98 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 9 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. எஞ்சிய 21 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் இருந்தன.

அதிகபட்சமாக பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனப் பங்குகள் 4.77% உயர்ந்தது. இதற்கு அடுத்தபடியாக டெக் மஹிந்திரா 2.33%, எச்சிஎல் டெக் 1.27%, டிசிஎஸ் 1.27%, எச்டிஎஃப்சி வங்கி 1.24%, இன்ஃபோசிஸ் 1.18%, பஜாஜ் ஃபின்சர்வ் 1.00%, மாருதி சுசூகி 0.28%, கோட்டாக் வங்கி 0.27% உயர்ந்திருந்தன.

இதேபோன்று எம்&எம் பங்குகள் அதிகபட்சமாக -3.25% வரை சரிந்தன. இதற்கு அடுத்தபடியாக சன் பார்மா -2.56%, பவர் கிரிட் -1.82%, என்டிபிசி -1.80%, அதானி போர்ட்ஸ் -1.65%, எல்&டி -1.61%, ஆக்சிஸ் வங்கி -1.31%, ஐசிஐசிஐ வங்கி -1.26% சரிந்தன.

நிஃப்டி நிலவரம்

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 36.60 புள்ளிகள் சரிந்து 24,435.50 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.15% சரிவாகும்.

வணிகத்தின் தொடக்கத்தில் 24,378.15 புள்ளிகளாக இருந்த நிலையில், படிப்படியாக உயர்ந்து 24,604.25 புள்ளிகள் வரை உயர்ந்தது. எனினும் வணிக நேர முடிவில் 36 புள்ளிகள் சரிந்து 24,435 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது.

நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் தீபக் ஃபெர்டிலைசர் 16.50%, ஆம்பர் என்டர்பிரைசஸ் 12.60%, ஃபர்ஸ்ட்சோர்ஸ் 12.10%, கோஃபோர்க் 11.20%, பேடிஎம் 8.55% உயர்வுடன் காணப்பட்டன.

இதேபோன்று சென்னை பெட்ரோ நிறுவனப் பங்குகள் அதிகபட்சமாக -10.63% சரிந்தன. இதற்கு அடுத்தபடியாக ராஜேஷ் எக்ஸ்போர்ட் -8.14%, குஜராத் ஃபுளோரோகெம் -6.86%, ஏபிபி இந்தியா -5.80%, சீமென்ஸ் -5.07%, எம்&எம் ஃபைனான்சியல் -5.01% சரிந்திருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.