அமெரிக்க பரஸ்பர வரி.. மீண்டெழுந்த பங்குச் சந்தைகள்

அமெரிக்க பரஸ்பர வரிவிதிப்பு அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டெழுந்துவரும் பங்குச் சந்தைகள்
பங்குச் சந்தைகள்
பங்குச் சந்தைகள்
Published on
Updated on
1 min read

அமெரிக்கா அறிவித்த பரஸ்பர வரிவிதிப்பு எதிர்பார்க்கப்பட்டதைவிடவும் குறைவாக இருந்த நிலையில், பங்குச் சந்தைகள் இன்றைய வணிகத்தின் போது மீண்டெழுந்துள்ளன.

வியாழக்கிழமை காலை சரிவுடன் வணிகம் தொடங்கிய நிலையில், முற்பகல் வணிகத்தின்போது சுமார் 700 புள்ளிகள் ஏற்றத்தைக் கண்டுள்ளன.

சென்செக்ஸ் அதிகபட்சமாக 76,493.74 புள்ளிகளுக்கும், நிஃப்டி 160 புள்ளிகள் உயர்ந்து 23,306.50 என்ற அளவிலும் வணிகமாகின.

மருந்து தயாரிப்பு நிறுவனப் பங்குகளில் ஏற்பட்ட ஏற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலைகள் தளர்த்தப்பட்டது போன்றவை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த பரஸ்பர வரி விதிப்புகளால் ஏற்பட்ட இன்றைய காலை நேர வணிக இழப்புகளை ஈடுகட்ட உதவியிருப்பதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்கா, பரஸ்பர வரி விதிப்பை அறிவிக்கவிருந்த நிலையில், கடந்த ஒரு சில நாள்களாக இறங்குமுகமாக இருந்த வணிகம், மருந்துப் பொருட்களுக்கு அமெரிக்காவின் புதிய பரஸ்பர வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதும், இந்தியாவின் வரி விதிப்புக்கு, ஒப்பீட்டளவில் அமெரிக்காவின் குறைந்த வரி விதிப்பும் முக்கிய காரணிகளாக இருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்னர்.

அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி ஆகிய இரண்டும் புதன்கிழமை மாலை லாபத்தில் முடிவடைந்த நிலையில், இன்று காலை சரிவுடன் தொடங்கினாலும், பிறகு மெல்ல மீண்டெழுந்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com