மும்பை: வணிகத்தின் இறுதிநாளான வெள்ளிக்கிழமை காலை வணிகம் தொடங்கியபோதே, தகவல்தொழில்நுட்ப நிறுவனப் பங்குகளின் வீழ்ச்சியால், வணிகமும் சரிவுடன் காணப்பட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்பினால் உலகளவில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்படலாம் என்ற அச்ச உணர்வு காரணமாக, பங்குச் சந்தைகளில் இன்று வீழ்ச்சி காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சென்செக்ஸ் வணிகத்தில் டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ், எல்அன்ட்டி, மாருதி, டெக் மகிந்திரா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இவற்றின் பங்குகள் 3.5 சதவீதம் வரை சரிந்தது. அதேவேளையில் எச்டிஎஃப்சி வங்கி, பாரதி ஏர்டெல், பஜாஜ் பைனான்ஸ், எம்அன்ட்எம் பங்குகள் லாபத்துடன் வணிகத்தைத் தொடங்கின.
இன்றைய பங்குச் சந்தை வீழ்ச்சியால் முதலீட்டாளர்களின் ரூ.9 லட்சம் கோடி முதலீடு நஷ்டத்தைச் சந்தித்திருப்பதாகவும், பொருளாதார நெருக்கடி நிலை அச்சமே இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
இன்றைய வணிகத்தின் இடையே சென்செக்ஸ் அதிகபட்சமாக 1,009.07 புள்ளிகள் வரை சரிவைச் சந்தித்து, 75,286.29 என்ற அளவிலும், நிஃப்டி 375.7 புள்ளிகள் சரிந்து 22,874.40 என்ற அளவிலும் வணிகமாகின.
ஒட்டுமொத்தமாக, தகவல்தொழில்நுட்பத் துறை, மருந்து தயாரிப்பு நிறுவனம் மற்றும் உலோக நிறுவனப் பங்குகள்தான் அதிகம் வீழ்ச்சியடைந்துள்ளன. மேலும், 2,496 பங்குகள் சரிவையும் 834 நிறுவனப் பங்குகள் லாபத்தையும் 116 பங்குகள் மாற்றமின்றியும் வணிகமானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்செக்ஸ், நிஃப்டி மீட்சி: உச்சம் தொட்ட எஃப்எம்சிஜி, வாகனத் துறை பங்குகள்!

தொடா் சரிவில் இருந்து சென்செக்ஸ், நிஃப்டி மீட்சி!

சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவு!

2 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


