முதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!தவெக திட்டங்களுக்கு ’தாய்மாமன் காது குத்தும் திட்டம்’ எனப் பெயர் வைக்கலாம்! உதயநிதி ஸ்டாலின் நேபாள வெள்ளம்! பலி 1,252 ஆக உயர்வு! 4,875 பேர் காணவில்லை!சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்! தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!சென்னையில் ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!சென்னையில் ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய்தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் பரபரப்புமேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

அமுல் வருவாய் ரூ.1 லட்சம் கோடியை எட்டும்: மேத்தா

பால் மற்றும் பால் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், அமுல் வருவாய், நடப்பு நிதியாண்டில், 10 சதவிகிதம் அதிகரித்து, 1 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமுல் பால் - கோப்புப் படம்

Published On :6 ஏப்ரல் 2025, 10:18 pm IST

புதுதில்லி: பால் மற்றும் பால் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், இந்தியாவின் முன்னணி பால் பிராண்டான அமுல், அதன் வருவாய், நடப்பு நிதியாண்டில், 10 சதவிகிதம் அதிகரித்து, 1 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட், 'அமுல்' என்ற பிராண்டின் கீழ் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

இது குறித்து அதன் நிர்வாக இயக்குநர் ஜெயன் மேத்தா மேலும் தெரிவித்ததாவது:

அமுல் பிராண்டின் மொத்த வருவாய் 2025-26 நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடியை எட்டும். இந்த நிதியாண்டில் 14 சதவிகித வளர்ச்சி உடன் ரூ.75,000 கோடி இலக்காகக் கொண்டுள்ளோம்.

18 உறுப்பு தொழிற்சங்கங்கள் அமுல் தயாரிப்புகளை நேரடியாக சந்தைப்படுத்துவதன் மூலம், இந்த நிதியாண்டில் அவர்களின் வருவாய் ரூ.25,000 கோடியாக இருக்கும் அதே வேளையில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.1 லட்சம் கோடியாக இருக்கும் என்றார்.

2024-25 நிதியாண்டில், அதன் வருவாய் 11 சதவிகிதம் அதிகரித்து ரூ.65,911 கோடியாகவும், 2023-24ல் அதன் விற்பனை சுமார் ரூ.59,250 கோடியாக இருந்தது.

குஜராத்தின் 18,600 கிராமங்களில் 36 லட்சம் விவசாயிகளைக் கொண்ட உலகின் மிகப்பெரிய விவசாயிகளுக்கு சொந்தமான பால் கூட்டுறவு நிறுவனமான ஜி.சி.எம்.எம்.எஃப். என்ற நிலையில், அதன் சங்கங்கள் வாயிலாக நாள் ஒன்றுக்கு 350 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வருகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அதன் உள்ளீட்டு செலவுகள் அதிகரித்ததால் பால் விலை உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜி.சி.எம்.எம்.எஃப். இந்தியா முழுவதும் ஒரு லிட்டர் பேக்குகளின் விலையை ரூ.1 குறைத்தது. அதே வேளையில் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய ஜி.சி.எம்.எம்.எஃப் தொடர்ந்து அதன் திறனை விரிவுபடுத்தும் என்றது.

உள்நாட்டு சந்தையைத் தவிர, ஜி.சி.எம்.எம்.எஃப். சுமார் 50 நாடுகளுக்கு தனது பால் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.