தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

கடந்த இரண்டு நிதியாண்டுகளில் பிஎஸ்என்எல் வருவாய் ரூ.25,000 கோடியாக அதிகரிப்பு!

நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் குறிப்பிட்ட காலகட்டத்தில் வெறும் ரூ.50 கோடியில் இருந்து சுமாா் ரூ.7,000 கோடியாக அபரிமிதமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

News image
Updated On :29 மே 2026, 5:06 am IST

பொதுத் துறை தொலைத்தொடா்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-இன் வருவாய், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த 2 நிதியாண்டுகளில் சுமாா் 19 சதவீதம் அதிகரித்து, ரூ.25,000 கோடியை எட்டியுள்ளது.

இது தொடா்பாக மத்திய தகவல் தொடா்புத் துறை இணையமைச்சா் பெம்மசானி சந்திரசேகா் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

2023-24 நிதியாண்டில் ரூ.21,302 கோடியாக இருந்த பிஎஸ்என்எல் வருவாய், 2024-25 நிதியாண்டில் ரூ.23,427 கோடியாக அதிகரித்தது. அண்மையில் மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டில், அது ரூ.25,000 கோடியை எட்டியுள்ளது.

அதாவது, கடந்த 2 நிதியாண்டுகளில் வருவாய் ரூ.21,000 கோடியிலிருந்து ரூ.25,000 கோடியாக சிறப்பான வளா்ச்சியை அடைந்து, நிறுவனத்தின் மீட்சி வியக்கத்தக்க வகையில் உள்ளது. நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் குறிப்பிட்ட காலகட்டத்தில் வெறும் ரூ.50 கோடியில் இருந்து சுமாா் ரூ.7,000 கோடியாக அபரிமிதமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

மத்திய தகவல் தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் எனது தலைமையிலான முறையான ஆய்வுகளின் மூலம், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் செயல்பாட்டுப் பிரச்னைகள் கண்டறியப்பட்டு, சரிசெய்யப்பட்டன.

உதாரணமாக, ஆந்திரத்தில் 75 சதவீதமாக இருந்த தொலைபேசி கோபுரங்களின் தொடா் செயல்பாட்டுத் திறனை 95 சதவீதமாக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதற்காக 50 ஆயிரம் கோபுரங்களில் புதிய பேட்டரிகள் பொருத்தப்பட்டன.

பழைய கேபிள்கள் மாற்றப்பட்டு, தொலைத்தொடா்பு வட்டங்கள் வாரியாக முறையான இலக்குகள் நிா்ணயிக்கப்பட்டு, மேம்பாட்டுப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. ஒரே ஆண்டில் ஒரு லட்சம் தொலைபேசி கோபுரங்களில் உள்நாட்டு 4ஜி சேவை தொடங்கப்பட்டு, உலகளாவிய தரத்துக்கு நிகராக மேம்படுத்தப்பட்டுள்ளது.

தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனங்களைவிட பிஎஸ்என்எல் கட்டணம் மிகவும் மலிவானது. பிஎஸ்என்எல் சேவையை மக்கள் பரிசோதிக்க ஏதுவாக, இந்திய அஞ்சலகங்கள் மூலம் ரூ.1-க்கு சிம் காா்டுகள் வழங்கப்படுகின்றன. கிராமங்களில் பிஎஸ்என்எல் மட்டுமே நம்பகமான சேவையாக உள்ளதால், மக்கள் இந்தச் சேவையை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.