சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் சவரனுக்கு ரூ. 1,200 உயர்ந்துள்ளது.
கடந்த வார இறுதிமுதல் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்துவந்த நிலையில், புதன்கிழமை காலை சவரனுக்கு ரூ. 520 அதிகரித்தது.
தொடர்ந்து, மாலை மீண்டும் சவரனுக்கு ரூ. 960 அதிகரித்து, ஒரு சவரனின் விலை ரூ. 67,280 ஆக விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,480 அதிகரித்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 1,200 தடாலடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ. 150 உயர்ந்து ரூ. 8,560-க்கும், ஒரு சவரன் ரூ. 68,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இரண்டு நாள்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 2,680 உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே, வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ. 3 அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 107-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க : நாடு கடத்தப்பட்டார் தஹாவூா் ராணா! தில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27)

தங்கம் விலை குறைவு! வெள்ளி விலை? ஜூலை 16 நிலவரம்!

தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? ஜூலை 15 நிலவரம்!

தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை! எவ்வளவு தெரியுமா? (ஜூலை 14)
விடியோக்கள்

தனுஷ்க்கும் அரசியல் ஆசை| Valaipechu Anthanan Interview | Dhanush | National Film Award | TVK| CM Vijay



