
இந்தியாவில் விவோ நிறுவனத்தின் வி50இ மாடல் ஸ்மார்ட்போன் வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் விவோ நிறுவனம் புகைப்படப் பிரியர்களை ஈர்க்கும் வகையிலான கேமிரா சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகின்றன.
தற்போது வெளியிடப்பட்டுள்ள வி50இ மாடல் ஸ்மார்ட்போனில், 50 எம்பி இரட்டை பின்புறக் கேமிராக்களும், 50 எம்பி முன்புறக் கேமிராவும் இருக்கின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட வி50 மாடல் ஸ்மார்ட்போனின் அப்டேட் வெர்சனாக வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
6.77 இன்ச் அமோலேட் எச்டி+ டிஸ்பிளே
மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்
90 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5,600 பேட்டரி
8 ஜிபி ரேம்
மூன்று ஆண்டுகள் ஓஎஸ் (OS) மற்றும் நான்கு ஆண்டுகள் பாதுகாப்பு அப்டேட்டுகள் வழங்கப்படும்.
வெள்ளை மற்றும் நீள நிறத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன.
விலை
8 ஜிபி ரேம், 128 ஜிபி விலை ரூ. 28,999
8 ஜிபி ரேம், 256 ஜிபி விலை ரூ. 30,999
வருகின்ற ஏப்ரல் 17 முதல் அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் விவோ இந்தியா விற்பனை தளங்கள் மூலம் கிடைக்கும். நாடு முழுவதும் இன்றுமுதல் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளன.