
மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ்ஆப், மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலிகளில் முதலிடத்தில் உள்ளது. இதில் புதிதாக 2 வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதில், வாட்ஸ்ஆப் குழுக்களில் எத்தனை பேர் ஆன்லைனில் உள்ளனர் என்பதை அறியும் வசதியும் ஒன்றாகும். மேலும், ஒரு குழுவில் உங்கள் பெயர் டேக் செய்தால் மட்டும் நோட்டிஃபிகேஷன் வரும் வகையிலும் புதிய வசதி அறிமுகமாகிறது.
வெறும் அரட்டை அடிப்பதற்கான வாய்ப்போடு அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ்ஆப் தொடர்ந்து பயனர்களின் தேவைக்கேற்ப அதிகமான வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. செய்துகொண்டும் இருக்கிறது.
இப்போது, வாட்ஸ்ஆப் குழு, கம்யூனிட்டி, சேனல், ஸ்டேட்டஸ், விடியோ கால், பணம் அனுப்பும் வசதி என பல எண்ணற்ற வசதிகளுடன் நாள்தோறும் பயனர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே செல்வதில் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறது.
தற்போது, வாட்ஸ்ஆப் செயலிக்கு மெருகேற்றும் வகையில், ஒரு குழுவில், எத்தனை பேர் ஆன்லைனில் இருக்கிறார்கள் என்பதை அறியும் வசதியும் குரூப்களில் வரும் அத்தனை செய்திகளும் ஒருவருக்கு நோட்டிபிகேஷனாக வராமல், ஒருவரது நம்பரை யாரேனும் டேக் செய்தால் மட்டுமே நோட்டிஃபிகேஷனாக வருவது இன்னொரு வசதியாகும்.
ஒரு குழுவில் பேசும்போது, அதில் யார் யாரெல்லாம் ஆன்லைனில் இருக்கிறார்கள் என்பதற்கான இன்டிகேட்டர் காட்டும்போது, அவர்களிடம் தயக்கமின்றி பேச வசதி ஏற்படுகிறது.
மேலும், குழுக்களில் இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த ஈவன்ட்டுகளை, தனிநபர் அட்டையிலும் ஏற்படுத்தலாம்.