கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

கடன் வட்டியைக் குறைத்த எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ்

25 அடிப்படை புள்ளிகள் (0.25 சதவீதம்) குறைத்துள்ளது.

Updated On :

தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை இந்தியாவின் மிகப் பெரிய வீட்டுக் கடன் சேவை நிறுவனமான எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் 25 அடிப்படை புள்ளிகள் (0.25 சதவீதம்) குறைத்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரெப்போ வட்டி விகித்தை ரிசா்வ் வங்கி அண்மையில் குறைத்துள்ளது. அதன் அடிப்படையில், நிறுவனம் வழங்கும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகித்தில் 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன.

ஏப். 28 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய வட்டி விகிதங்கள் 8 சதவீதம் முதல் தொடங்குகின்றன. இந்த வட்டி விகிதக் குறைப்பின் பலன் புதிய வாடிக்கையாளா்கள் மட்டுமின்றி, ஏற்கெனவே வீட்டுக் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளா்களுக்கும் கிடைக்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.