அறிமுகமானது விவோ ஒய் 400! தள்ளுபடி விலையில் பெறுவது எப்படி?

இந்திய மின்னணு சந்தையில் விவோ ஒய் 400 5ஜி என்ற ஸ்மார்ட்போன் இன்று (ஆக. 4) அறிமுகமானது.
Vivo Y400 5G smart phone
விவோ ஒய் 400 5ஜிபடம் / நன்றி - விவோ
Published on
Updated on
1 min read

இந்திய மின்னணு சந்தையில் விவோ ஒய் 400 5ஜி என்ற ஸ்மார்ட்போன் இன்று (ஆக. 4) அறிமுகமானது. ஸ்நாப்டிராகன் 4 மற்றும் 6000 mAh பேட்டரி திறன் கொண்டதால், மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

விவோ ஒய் 400 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமான சில நாள்களிலேயே இந்த ஸ்மார்ட்போனும் அறிமுகமாகியுள்ளதால், அதன் சிறப்புகள் இதிலும் எதிரொலித்துள்ளன.

விவோ ஒய் 400 சிறப்பம்சங்கள்

  • விவோ ஒய் 400 ஸ்மார்ட்போனானது, 6.67 அங்குல அமோலிட் திரை கொண்டது. சுமுகமாக திரை இயங்கும் வகையில் 120Hz திறன் கொண்டது. வெளிப்புற பயன்பாட்டின்போது திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 1800 nits திறன் வழங்கப்பட்டுள்ளது.

  • பின்புறம் 50MP கேமராவுடன் சோனி நிறுவனத்தின் IMX852 லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 2MP டெப்த் சென்சார் உடையது. நீருக்குள் இருந்தபடி புகைப்படம் எடுக்கலாம் என விவோ நம்பிக்கை வழங்குகிறது. நீர் மற்றும் தூசு புகாத்தன்மைக்காக IP68/69 திறன் வழங்கப்பட்டுள்ளது.

  • செய்யறிவு தொழில்நுட்பத்தில் பல புதிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

  • ஒலியை பல மொழிகளில் எழுத்தாக மாற்றக்கூடிய செய்யறிவு அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

  • பெரிய பத்தி உடைய சொற்களை அடுக்கவும், திருத்தவும் செய்யும்.

  • விடியோக்களில் இருந்தும் அதன் தரவுகளை வார்த்தைகளாக விவரிக்கும்.

  • கோப்புகளை பல்வேறு ஃபார்மட்களில் வழங்கும்

  • கேமராவில் ஒரு பொருளைக் காண்பித்தால், அது குறித்த மொத்த தரவுகளையும் எழுத்துகளாக காண்பிக்கும்.

  • புகைப்படங்களில் தேவையற்ற பின்புறங்களை நீக்கிக்கொள்ளும் செய்யறிவு அம்சங்கள் உள்ளடக்கியுள்ளது.

  • இத்தனை செய்யறிவு அம்சங்கள் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 20,000.

தள்ளுபடி விலையில் பெறுவது எப்படி?

இணைய விற்பனை தளமான ஃபிளிப்கார்ட்டில் விவோ ஒய் 400 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கினால், குறிப்பிட்ட வங்கி கடன் அட்டைகளுக்கு (எஸ்பிஐ, ஃபெடரல் வங்கி, ஐடிபிஐ வங்கி, டிபிஎஸ் வங்கி, யெஸ் வங்கி) 10% தள்ளுபடி உள்ளது.

இதேபோன்று கூடுதலாக ரூ.1,000 போனஸ் தள்ளுபடியும் செய்யப்படுகிறது. ஆக. 7 முதல் நண்பகல் 12 மணி முதல் இதன் விற்பனை தொடங்கவுள்ளது. தற்போது முன்பதிவுகள் வரவேற்கப்படுவதாக விவோ அறிவித்துள்ளது.

ஜியோ பயனாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால், எந்தவித கட்டணமும் செலுத்தாமல் 10 முன்னணி ஓடிடி தளங்களை 2 மாதங்களுக்கு பார்த்துக்கொள்ளலாம்.

இதையும் படிக்க | ஐபோன் 16இ மாடலுக்கு ரூ. 11,000 ஆஃபர்! எப்படி?

Summary

Vivo Y400 5G Launched in India with Snapdragon 4 Gen 2 SoC and 6,000mAh Battery

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com