

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது.
இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. இந்நிலையில் நேற்று(புதன்கிழமை) இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ. 90.15 ஆக சரிந்தது.
இந்நிலையில் இன்று(வியாழக்கிழமை) காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்து ரூ. 90.43 ஆக உள்ளது. ஓராண்டுக்குள் ரூபாயின் மதிப்பு ரூ. 5 சரிந்துள்ளது. (ரூ. 85 லிருந்து ரூ. 90 ஆக சரிவு).
இறக்குமதி தொடர்பான வர்த்தகப் பற்றாக்குறை, வெளிநாட்டு முதலீடுகள் திரும்பப் பெறப்படுதல், டாலர் மதிப்பு உயர்வு உள்ளிட்டவை ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணமாக இருப்பதாக நிபுணர்கள் கணிக்கின்றனர்.
நேற்று பங்குச்சந்தை நிறைவடையும் நேரத்தில் ரூபாயின் மதிப்பு ரூ. 90.19 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகம்! ஐடி பங்குகள் 1.5% வரை உயர்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.