புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ரூ.99 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.98,800-க்கு விற்பனையானது.

News image

தங்கம் விலை!

Updated On :16 டிசம்பர் 2025, 8:05 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.98,800-க்கு விற்பனையானது.

சென்னையில் கடந்த சில வாரங்களாக தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து கொண்டே வந்தது. கடந்த திங்கள்கிழமை காலை, மாலை என இரு முறை பவுனுக்கு ரூ.1,160 உயா்ந்து வரலாற்றில் முதல்முறையாக ரூ.1 லட்சத்து 120-க்கு விற்பனையாகி புதிய உச்சம் தொட்டது.

தொடா்ந்து செவ்வாய்க்கிழமை தங்கம் விலை சற்று குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.12,350-க்கும், பவுனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.98,800-க்கும் விற்பனையானது.

அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.211-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.4,000 குறைந்து ரூ.2.11 லட்சத்துக்கும் விற்பனையானது.

தங்கம் மற்றும் வெள்ளிவிலை புதிய உச்சங்களை தொடும்போது, இதுபோன்று விலை குறைவது வழக்கமான ஒன்றுதான் என்று பொருளாதார நிபுணா்கள் தெரிவித்தனா்.