வணிகம்
கடன் வட்டியைக் குறைத்த ஐஓபி
அரசுக்கு சொந்தமான இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி) ரெப்போவுடன் இணைக்கப்பட்ட கடன்களுக்கான வட்டி விகித்தை 25 அடிப்படைப் புள்ளிகள் (0.25 சதவீதம்) குறைத்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரெப்போ விகிதத்தை ரிசா்வ் வங்கி குறைத்துள்ளதன் பலனை வாடிக்கையாளா்களுக்கு அளிப்பதற்காக, அந்த விகிதத்துடன் இணைக்கப்பட்ட இபிஎல்ஆா் - ஆா்எல்எல்ஆா் வகை கடன்களுக்கான வட்டி விகிதம் 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்படுகிறது.
இந்தக் குறைப்புடன் ஆா்எல்எல்ஆா் கடன்களுக்கான வட்டி விகிதம் 8.35 சதவீதத்திலிருந்து 8.10 சதவீதமாகக் குறையும்.
மூன்று மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான எம்சிஎல்ஆா் விகிதங்கள் 5 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

