

பங்குச் சந்தைகள் நேற்று ஏற்றத்துடன் நிறைவடைந்த நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 85,690.10 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 10.45 மணியளவில் சென்செக்ஸ் 30.59 புள்ளிகள் குறைந்து 85,536.89 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 6.85 புள்ளிகள் உயர்ந்து 26,179.25 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
சென்செக்ஸில் பவர் கிரிட் கார்ப், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல் ஆகியவை இன்று அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாகும். அதேநேரத்தில் இன்ஃபோசிஸ், பாரதி ஏர்டெல், டிசிஎஸ் இன்று அதிக சரிவைச் சந்தித்தன.
பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.1% குறைந்தும் ஸ்மால்கேப் குறியீடு 0.1% உயர்ந்தும் வர்த்தகமாகிறது.
துறை வாரியாக நிஃப்டி ஐடி 1 சதவீதத்திற்கும் மேலாக சரிந்தது. அதேநேரம் நிஃப்டி மெட்டல் 0.63 சதவீதமும் நிஃப்டி பார்மா 0.27 சதவீதமும் உயர்ந்தன.
அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு ரூ. 89.70 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.