
2025-26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று(பிப். 1) தாக்கல் செய்யப்படவிருப்பதால் பங்குச் சந்தைகள் இன்று செயல்படுகின்றன.
அதன்படி, பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,888.89 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
பங்குச்சந்தை தொடர்ந்து ஏற்றமடைந்து வரும் நிலையில், காலை 11 மணியளவில், சென்செக்ஸ் 1,018.88 புள்ளிகள் அதிகரித்து 77,778.69 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 301.85 புள்ளிகள் உயர்ந்து 23,551.35 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
ஐடி, எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை தவிர, மற்ற அனைத்து துறைகளும் ஏற்றம் கண்டு வருகின்றன. மின்சாரம், ரியல் எஸ்டேட், நுகர்வோர் சாதனங்கள், எஃப்எம்சிஜி துறைகள் 0.5 முதல் 1 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
நிஃப்டியில் சன் பார்மா, பாரத் எலக்ட்ரானிக்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், அதானி போர்ட்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவை அதிக லாபமடைந்தன.
அதேநேரத்தில் ஹீரோ மோட்டோகார்ப், ஓஎன்ஜிசி, டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், டிரென்ட், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.
இந்தியாவில் இன்று(பிப். 1) 2025-26 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.