புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

9 அதானி குழும பங்குகள் சரிவுடன் முடிவு!

லஞ்சம் குறித்து கௌதம் அதானி மற்றும் சாகர் அதானி மீதான புகார் வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் பெடரல் நீதிபதியிடம் தெரிவித்துள்ளதால், அதானி குழுமத்தின் 9 பங்குகள் சரிந்து முடிந்தது.

News image

அதானி குழுமம்

Updated On :19 பிப்ரவரி 2025, 2:23 pm

DIN

புதுதில்லி: லஞ்சம் வழங்கியது குறித்து கௌதம் அதானி மற்றும் சாகர் அதானி மீதான புகார் வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் பெடரல் நீதிபதியிடம் தெரிவித்துள்ளதால், அதானி குழுமத்தின் ஒன்பது பங்குகள் இன்று சரிந்து முடிந்தது.

அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 3.75 சதவிகிதமும், அதானி எண்டர்பிரைசஸ் 1.78 சதவிகிதமும், அம்புஜா சிமெண்ட்ஸ் 1.36 சதவிகிதமும், ஸங்கி இண்டஸ்ட்ரீஸ் 1.36 சதவிகிதமும், ஏசிசி 0.93 சதவிகிதமும், அதானி வில்மர் 0.90 சதவிகிதமும், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் 0.81 சதவிகிதமும், அதானி பவர் 0.47 சதவிகிதமும், அதானி போர்ட்ஸ் 0.28 சதவிகிதமும் சரிந்தது.

இன்ட்ரா டே வர்த்தகத்தில், அதானி கிரீன் எனர்ஜியின் பங்குகள் 4.25 சதவிகிதமும், அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 4.30 சதவிகிதமும் சரிந்தது. இருப்பினும், என்டிடிவி-யின் பங்குகள் 1.35 சதவிகிதமும், அதானி டோட்டல் கேஸ் 0.54 சதவிகிதமும் உயர்ந்தது.

பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் ஆனது நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி நிக்கோலஸிடம், கௌதம் அதானி மற்றும் சாகர் அதானி மீதான புகாரை வழங்குவதற்கான முயற்சிகள் குறித்து தனது நிலையை சமர்ப்பித்தது.

அதே வேளையில், அதானி கிரீன் நிறுவனமானது, செப்டம்பர் 2021 கடன் வழங்கல் தொடர்பாக அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் பொறுப்பற்ற முறையில் தவறான பிரதிநிதித்துவங்களை வழங்கியதன் மூலம் கௌதம் அதானி மற்றும் சாகர் அதானி ஃபெடரல் செக்யூரிட்டீஸ் சட்டங்களின் மோசடி எதிர்ப்பு விதிகளை மீறியுள்ளனர் என்றது.

கடந்த ஆண்டு நவம்பரில், பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் அசூர் பவர் குளோபல் லிமிடெட் நிர்வாகி சிரில் கபானெஸ் ஆகியோர் மீது லஞ்சத் திட்டத்திலிருந்து எழும் புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டியது.

நீதித்துறை மற்றும் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் ஆகியவற்றின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று அதானி குழுமம் தெரிவித்துள்ள நிலையில் அவற்றை மறுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.