தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு! ஏற்றம் கண்ட ஆட்டோ துறை பங்குகள்!

ஆண்டின் முதல் நாள் வர்த்தகத்தில், முதலீட்டாளர்களின் உணர்வை வெகுவாக ஈர்த்து, பெஞ்ச்மார்க் குறியீடான நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் உயர்ந்து முடிந்தது.

News image
கோப்புப் படம்
Updated On :1 ஜனவரி 2025, 12:04 pm

DIN

மும்பை: ஆண்டின் முதல் நாள் வர்த்தகத்தில், நேர்மறையான குறிப்பில் பயணித்து, முதலீட்டாளர்களின் உணர்வை வெகுவாக ஈர்த்ததால், பெஞ்ச்மார்க் குறியீடான நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் இன்று உயர்ந்து முடிந்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 100.99 புள்ளிகள் உயர்ந்து 78,240.00-ஆகவும், நிஃப்டி 20.20 புள்ளிகள் உயர்ந்து 23,665.00-ஆகவும் இருந்தது. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 368.40 புள்ளிகள் உயர்ந்து 78,507.41-ஆகவும், நிஃப்டி 98.10 புள்ளிகள் உயர்ந்து 23,742.90-ஆகவும் நிலைபெற்றது.

ஏசியன் பெயிண்ட்ஸ், லார்சன் & டூப்ரோ, பஜாஜ் ஃபைனான்ஸ், இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக், பஜாஜ் ஃபின்சர்வ், மாருதி சுசூகி, மஹிந்திரா & மஹிந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ், ஈச்சர் மோட்டார்ஸ் ஆகியவை உயர்ந்து முடிந்தது.

டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், அதானி போர்ட்ஸ், ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி, மாருதி மற்றும் கோடக் மஹிந்திரா உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிந்தது.

ரியாலிட்டி மற்றும் மெட்டல் தவிர, மற்ற அனைத்து துறை குறியீடுகளும் உயர்ந்து முடிந்தது. வாகனம், மின்சாரம் மற்றும் மூலதன பொருட்கள் குறியீடுகள் தலா 1 சதவிகிதம் வரை உயர்ந்தது.

ஆத்தம் இன்வெஸ்ட்மென்ட், கெய்ன்ஸ் டெக்னாலஜி, கோரமண்டல் இன்டர்நேஷனல், ப்ளூ ஸ்டார், லெமன் ட்ரீ, முத்தூட் ஃபைனான்ஸ், லாயிட்ஸ் மெட்டல்ஸ், பிரஜ் இண்டஸ்ட்ரீஸ், லாரஸ் லேப்ஸ், ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ், யுனைடெட் ஸ்பிரிட்ஸ், இப்கா லேப்ஸ், ராடிகோ கெய்தான் உள்ளிட்ட 150 பங்குகள் இன்றைய மும்பை பங்குச் சந்தையில் 52 வார உச்சத்தைத் தொட்டது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ.4,645.22 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.88 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 74.64 அமெரிக்க டாலராக உயர்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.