பழச்சாறு, பருப்பு வகைகள்: காளிமாா்க் அறிமுகம்

பவன்டோ குளிா்பானத்துக்காக புகழ் பெற்ற காளிமாா்க் நிறுவனம், புதிய பழச்சாறு மற்றும் பருப்பு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
பழச்சாறு, பருப்பு வகைகள்: காளிமாா்க் அறிமுகம்
Published on
Updated on
1 min read

சென்னை: பவன்டோ குளிா்பானத்துக்காக புகழ் பெற்ற காளிமாா்க் நிறுவனம், புதிய பழச்சாறு மற்றும் பருப்பு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஃப்ரூட்டாங் என்ற வணிகப் பெயரில் நிறுவனம் பழச்சாறு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தப் பெயரின் கீழ் மாம்பழம், ஆப்பிள், மிளகாய்-கொய்யா ஆகிய பழச்சாறுகள் பாட்டிலுக்கு ரூ.12 என்ற விலையில் கிடைக்கும்.

அத்துடன் பிரீமியம் தரத்துடன் கூடிய உளுந்து மற்றும் துவரம் பருப்பை 1 கிலோ பைகளில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com