புதுதில்லி: மின்சார வாகன நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட், விதிமுறைகளை மீறியதற்காக சந்தை கட்டுப்பாட்டாளரான செபியிடம் இருந்து நிர்வாக எச்சரிக்கையைப் பெற்றுள்ளது.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனர், பவிஷ் அகர்வால் டிசம்பர் 2 ஆம் தேதி அன்று காலை 10 மணி அளவில் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு விடியோவை வெளியிட்டார். அதில் டிசம்பர் 20 க்குள் நிறுவனத்தின் விற்பனை வலையமைப்பை கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரிக்கும் தனது திட்டத்தை பகிர்ந்து கொண்டார். பிறகு டிசம்பர் 2-ஆம் தேதி மதியம் 1.30 மணி அளவில் செபியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஓலா எலக்ட்ரிக் தனது இ-ஸ்கூட்டர் விரிவாக்க திட்டங்களை முதலில் செபியிடம் தெவிப்பதற்கு பதிலாக சமூக ஊடகங்களில் அறிவித்ததன் மூலம், அனைத்து முதலீட்டாளர்களுக்கும் சமமான மற்றும் சரியான நேரத்தில் தகவல்களை வழங்க நீங்கள் தவறிவிட்டீர்கள். இதற்காக ஜனவரி 7 ஆம் தேதி மின்னஞ்சல் வழியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதையும் படிக்க: கரடியின் ஆதிக்கத்தால் சரிவுடன் முடிவடைந்த இந்திய பங்குச் சந்தை!
செபி தனது எச்சரிக்கை கடிதத்தில், மேற்கண்ட விதிமீறல்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் இருக்க எதிர்காலத்தில் கவனமாக இருக்கவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறினால் அமலாக்க நடவடிக்கை தொடங்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.
இதனிடைய இன்று (புதன்கிழமை) ஓலா எலக்ட்ரி நிறுவனத்தின் பங்குகள் 4.78 சதவிகிதம் சரிந்து பங்கு ஒன்றுக்கு ரூ.75.38 ஆக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ. 15 லட்சம் கோடி சர்ச்சை... பேசுபொருளான ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்! செபிக்கு ஒத்துழைக்கத் தயார்!!

செபி-யிடம் 400 ஜிபி ஆவணங்கள் சமா்ப்பிப்பு!

ரூ.15 லட்சம் கோடி வருவாயை உயா்த்தி காட்டிய ராஜேஷ் எக்ஸ்போா்ட்ஸ்

பாக்கெட் மது விற்பனைக்கு தடை கோரி மனு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



