ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஐடி, தனியார் வங்கிகளால் சென்செக்ஸ் 750 புள்ளிகளை இழந்தது! நிஃப்டி 23,150!!

ஐடி, தனியார் வங்கிகளால் சென்செக்ஸ் 750 புள்ளிகளை இழந்தும் நிஃப்டி 23,150 புள்ளிகளுக்கும் கீழ் வணிகமானது.

News image

பங்குச் சந்தை

Updated On :17 ஜனவரி 2025, 5:52 am

DIN

வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை காலை வணிகம் தொடங்கியதுமே, இந்தியப் பங்குச் சந்தைகளில் கரடியின் ஆதிக்கமே நிலவியது.

தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தனியார் வங்கிகளின் பங்குகள் காரணமாக, சென்செக்ஸ் இன்று காலை வணிகத்தின்போது 750 புள்ளிகள் சரிவை சந்தித்துளள்து. நிஃப்டி 23,150 புள்ளிகளுக்கும் கீழ் வணிகமானது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் 4 சதவீதத்துக்கும் அதிகமான சரிவுடன் பங்குகள் வணிகமாகின. இன்று சென்செக்ஸில் மிக மோசமாக வணிகமான பங்குகளில் இன்போசிஸ் முதலிடத்தில் இருந்தது.

அதுபோல, தனியார் நிறுவனப் பங்குகளின் வீழ்ச்சியும் சென்செக்ஸில் எதிரொலித்தது. அதாவது, இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கிகள் பங்குகள் இன்று கடும் வீழ்ச்சியை அடைந்துள்ளன.

ஐடி மற்றும் வங்கி குறியீடுகள் தலா 2 சதவீதம் சரிந்தன. பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 0.5% சரிந்தன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ், ஆக்சிஸ் வங்கி, ரயில் விகாஸ் நிகாம் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் ஆகியவை தேசிய பங்குச் சந்தையில் முன்னணியில் உள்ள நிறுவனப் பங்குகளாகும்.

இதனால், சென்செக்ஸ் 611 புள்ளிகள் (0.79%) சரிவடைந்து 76,430.87 என்ற புள்ளிகளில் வணிகமானது.

நிஃப்டியும் இன்று காலை வணிகத்தின்போது 174.35 புள்ளிகள் (0.75%) சரிவடைந்து 23.140.15 என்ற அளவில் வணிகமானது.

இதுபோல, நிப்டி பேங்க் குறியீடும் 819 புள்ளிகள் சரிந்து 48,459 என்ற அளவில் வணிகமானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.