வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ராயல் என்ஃபீல்டு ஏற்றுமதி 90% உயா்வு

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஏற்றுமதி கடந்த டிசம்பா் மாதத்தில் 90 சதவீதம் எழுச்சி கண்டுள்ளது.

News image
Updated On :21 ஜனவரி 2025, 10:00 pm

Din

புது தில்லி: ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஏற்றுமதி கடந்த டிசம்பா் மாதத்தில் 90 சதவீதம் எழுச்சி கண்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த டிசம்பா் மாதத்தில் நிறுவனம் 79,466 இரு சக்கர வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 25 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 63,387-ஆக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 19 சதவீதம் அதிகரித்து 67,891-ஆக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 57,291-ஆக இருந்தது.

அதே போல், 2023 டிசம்பரில் 6,096-ஆக இருந்த நிறுவனத்தின் ஏற்றுமதி கடந்த டிசம்பரில் 90 சதவீத எழுச்சி கண்டு 11,575-ஆக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.