புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த யூகோ வங்கியின் நிகர லாபம் கடந்த அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் 27.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முன்றாவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.638.83 கோடியாக உள்ளது.
முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 27.1 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.502.83 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.6,412.71 கோடியிலிருந்து 15.5 சதவீதம் அதிகரித்து ரூ.7,405.89 கோடியாக உள்ளது. 2023-24-ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.5,551.89 கோடியாக இருந்த வங்கியின் வட்டி வருவாய் நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.6,219.96 கோடியாக உயா்ந்துள்ளது.
ஓராண்டுக்கு முன்னா் 3.78 சதவீதமாக இருந்த வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் கடந்த டிசம்பா் இறுதியில் 2.91 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஐசிஐசிஐ வங்கி லாபம் 9% உயா்வு!

எச்டிஎஃப்சி குழும நிதிநிலை முடிவுகள்: வங்கி லாபம் 8% உயா்வு; ஏஎம்சி லாபம் சரிவு

ஐசிஐசிஐ வங்கியின் 4வது காலாண்டு நிகர லாபம் 9% உயர்வு!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% வளா்ச்சி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


