தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

அதானி வில்மர் லாபம் இரு மடங்காக அதிகரிப்பு!

அதானி வில்மர் நிறுவனத்தின் நிகர லாபம், 2024 - 25 ஆம் நிதியாண்டில், இரண்டு மடங்கு அதிகரித்து, ரூ.410.93 கோடி ஆக உள்ளது.

Published On :

புதுதில்லி: அதானி வில்மர் நிறுவனத்தின் நிகர லாபம், 2024 - 25 ஆம் நிதியாண்டில், இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.410.93 கோடி ஆக உள்ளது.

கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.200.89 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.12,887.21 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.16,926 கோடியானது.

சமையல் எண்ணெய் பிரிவின் வருவாய் ரூ.9,710.82 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.13,386.71 கோடியானது. அதே வேளையில் உணவு மற்றும் எஃப்எம்சிஜி பிரிவின் வருவாய் ரூ.1,273 கோடியிலிருந்து ரூ.1,558 கோடியாகவும், தொழில்துறை அத்தியாவசிய வருவாய் ரூ.1,844.12 கோடியிலிருந்து ரூ.1,914.59 கோடியாகவும், செலவினம் ரூ.12,606.26 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.16,379.76 கோடியானது.

இது குறித்து அதானி வில்மர் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அங்ஷு மாலிக் கூறியதாவது:

நிறுவனம் கடந்த ஐந்து காலாண்டுகளாக வலுவான லாபத்தை பதிவு செய்து வருகிறது. அதே வேளையில் வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடனளிப்புக்கு முன் வருவாய் ரூ.792 கோடியாகவும் மற்றும் வரிக்கு பிந்தைய லாபம் ரூ 411 கோடியாக உள்ளது என்று தெரிவித்தது.

கடந்த பன்னிரண்டு மாதங்களாக இ-காமர்ஸ் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 41% வளர்ச்சியடைந்துள்ளது. மூன்றாவது காலாண்டில் பிராண்டட் தயாரிப்புகளில் ஆண்டுக்கு ஆண்டு 15% வளர்ச்சியுடன், தென்னகத்தில் வலுவாக அடியெடுத்து வைத்துள்ளது.

நிறுவனத்தின் பங்குகள் பிஎஸ்இ-யில் ரூ.5.06 சதவிகிதம் உயர்ந்து ரூ.264.60 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.