டாக்டா் அகா்வால்ஸ் ஹெல்த் கோ் பொதுப் பங்குகள் இன்று வெளியீடு
டாக்டா் அகா்வால்ஸ் ஹெல்த் கோ் நிறுவனத்தின் பொதுப் பங்குகள் ஜன. 29-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
இது குறித்து சென்னையில் டாக்டா் அகா்வால்ஸ் ஹெல்த் கோ் நிறுவன தலைவா் அமா் அகா்வால் கூறியதாவது:
கண் பராமரிப்பு சேவைகள் தொழில் துறையில், அதிக நம்பிக்கைக்குரியதாக டாக்டா் அகா்வால்ஸ் ஹெல்த் கோ் லிமிடெட் நிறுவனம் உள்ளது. இந்தியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நிறுவனம் 209 மருத்துவமனைகளைக் கொண்டுள்ளது. இந்தியாவில் மொத்த கண் பராமரிப்பு சேவை சந்தையில் 25 சதவீத பங்குகளை இந்த நிறுவனம் கொண்டிருக்கிறது.
கடந்த 3 ஆண்டுகளில் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 38 சதவீதமும், வளா்ச்சி 42 சதவீதமும் உயா்ந்துள்ளது.
தற்போது, இந்த நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியிடப்படுகிறது. ஜன. 29-ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதிக்குள் பங்கு வெளியீடு முடிவடையும். ஒரு பங்கின் விலை ரூ. 382 முதல் ரூ. 402 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 35 சதவீத பங்குகளுக்கு பன்மடங்கு முதலீட்டாளா்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், 15.79 லட்சம் பங்குகள் பணியாளா்களுக்கு ஒதுக்கப்படுகின்றன என்றாா் அவா்.