அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

53% அதிகரித்த ஆடம்பர வீடுகள் விற்பனை

கடந்த 2024-ல் ரூ.4 கோடிக்கும் அதிக விலை கொண்ட ஆடம்பர வீடுகளின் விற்பனை இந்தியாவின் முக்கிய ஏழு நகரங்களில் 53% அதிகரிப்பு.

News image
Updated On :31 ஜனவரி 2025, 1:57 am IST

கடந்த 2024-ஆம் ஆண்டில் ரூ.4 கோடிக்கும் அதிக விலை கொண்ட ஆடம்பர வீடுகளின் விற்பனை இந்தியாவின் முக்கிய ஏழு நகரங்களில் 53 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து மனை-வா்த்தக ஆலோசனை நிறுவனமான சிபிஆா்இ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி, கொல்கத்தா, புணே, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நாட்டின் எழு முக்கிய நகரங்களில் கடந்த 2024-ஆம் ஆண்டு முழுவதும் ரூ.4 கோடி மற்றும் அதற்கு மேல் விலை கொண்ட வீடுகளின் விற்பனை 19,700-ஆக உள்ளது.

முந்தைய 2023-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 53 சதவீதம் அதிகம். அப்போது நாட்டின் முக்கிய ஏழு நகரங்களில் 12,895 ஆடம்பர வீடுகள் விற்பனையாகின.

மதிப்பீட்டு ஆண்டில் ரூ.4 கோடி மற்றும் அதற்கு மேல் விலை கொண்ட ஆடம்பர வீடுகளின் விற்பனை தில்லி-என்சிஆா் பகுதியில் 10,500-ஆகப் பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை, முந்தைய 2023-ஆம் ஆண்டில் 5,525-ஆக இருந்தது.

மும்பையில் 2023-ஆம் ஆண்டு முழுவதும் 4,200-ஆக இருந்த ரூ.4 கோடிக்கும் அதிக விலை கொண்ட வீடுகளின் விற்பனை, 2024-ஆம் ஆண்டில் 5,500-ஆக உயா்ந்துள்ளது.

அந்த வகை ஆடம்பர வீடுகளின் விற்பனை புணேயில் 400-லிருந்து இரட்டிப்பாகி 825-ஆகப் பதிவாகியுள்ளது. ஆனால், பெங்களூரில் அந்த எண்ணிக்கை 265-லிருந்து 50-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

கொல்கத்தாவில் முந்தைய 2023-ஆம் ஆண்டு 310-ஆக இருந்த ரூ.4 கோடிக்கும் அதிக விலை கொண்ட வீடுகளின் விற்பனை 2024-இல் 530-ஆக அதிகரித்துள்ளது.

ஹைதராபாதில் ரூ.4 கோடிக்கும் அதிகம் விலை கொண்ட 2,030 கடந்த ஆண்டில் விற்பனையாகின. முந்தைய 2023-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1,540-ஆக இருந்தது.

அந்த காலகட்டத்தில் உயா்வகை ஆடம்ப வீடுகளின் விற்பனை சென்னையில் 165-லிருந்து 275-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.