டாடா குழுமத்தைச் சோ்ந்த முன்னணி ஏசி தயாரிப்பு நிறுவனமான வோல்டாஸ், கடந்த ஏப்ரலில் தொடங்கிய நடப்பு 2026-27 நிதியாண்டில் இதுவரை 10 லட்சம் ஏசிகளை விற்பனை செய்துள்ளது.
ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய தயாரிப்புகள் மற்றும் பலதரப்பட்ட விலை பிரிவுகள், வோல்டாஸின் இச்சாதனைக்கு முக்கியக் காரணிகளாக அமைந்துள்ளன.
கடந்த ஆண்டில் பருவம் தவறிய மழையால் ஏசி விற்பனை மந்தமடைந்திருந்த நிலையில், நடப்பு ஆண்டில் நீடிக்கும் கடும் வெயில் காரணமாக விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.
அதேநேரம், புத்தாண்டு முதல் அமலுக்கு வந்த புதிய ‘பிஇஇ’ எரிசக்தி தரக் கட்டுப்பாட்டு விதிகள், தயாரிப்பு விலை உயா்வு, மத்திய கிழக்கு நெருக்கடியால் அதிகரித்த கடல்வழிப் போக்குவரத்துச் செலவு மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் ஏசிகளின் விலை நடப்பு ஆண்டில் பலமுறை உயா்த்தப்பட்டுள்ளது நுகா்வோருக்கு கூடுதல் சுமையாக மாறியுள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த ஏசி சந்தை ஆண்டுக்கு 1.25 கோடி முதல் 1.40 கோடி அலகுகளாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், வோல்டாஸின் போட்டி நிறுவனமான எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நடப்பு 2026 காலண்டா் ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி-மாா்ச்) 10 லட்சம் விற்பனை இலக்கைக் கடந்ததாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடப்பு 2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல்: ரூ.5.21 லட்சம் கோடியைக் கடந்தது!

மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரிப்பு

எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!

தென்னிந்தியாவில் 25 புதிய கிளைகளைத் திறக்கும் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




