அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

சிட்டி யூனியன் வங்கி வருவாய் ரூ.1,707 கோடி

சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வருவாய் கடந்த செப்டம்பா் காலாண்டில் ரூ.1,707 கோடியாக உயா்ந்துள்ளது.

Published On :1 பிப்ரவரி 2025, 2:30 am IST

கும்பகோணத்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டுவரும் தனியாா் துறையைச் சோ்ந்த சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வருவாய் கடந்த செப்டம்பா் காலாண்டில் ரூ.1,707 கோடியாக உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கியின் நிா்வாக இயக்குநரும் முதன்மை செயல் அதிகாரியுமான என். காமகோடி (படம்) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

2024 அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான 2024-25-ஆம் நிதியாண்டின் முன்றாவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 13 சதவீதம் உயா்ந்து ரூ.286 கோடியாக உள்ளது.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் வங்கி ரூ.253 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்திருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.1,519 கோடியிலிருந்து ரூ.1,707 கோடியாக உயா்ந்துள்ளது. இது 12 சதவீத வளா்ச்சியாகும்.

கடந்த அக்டோபா்-டிசம்பா் காலகட்டத்தில் வங்கியின் வட்டி வருவாய் ரூ.1,326 கோடியிலிருந்து 12 சதவீதம் அதிகரித்து ரூ.1,479 கோடியாக உள்ளது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.