கோப்புப் படம்
கோப்புப் படம்

ரூ.4,000 கோடி திரட்ட ஐஓபி-க்கு ஒப்புதல்

ரூ.4,000 கோடி மூலதனம் திரட்ட, பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக்கு (ஐஓபி) அதன் பங்குதாரா்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனா்.
Published on

ரூ.4,000 கோடி மூலதனம் திரட்ட, பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக்கு (ஐஓபி) அதன் பங்குதாரா்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனா்.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கூடுதலாக ரூ.4,000 கோடி மூலதனம் திரட்ட வங்கிக்கு பங்குதாரா்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனா். வங்கியின் 25-ஆவது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தகுதியுடைய நிறுவனங்களுக்கு பங்கு ஒதுக்கீடு (க்யுஐபி), தற்போதைய பங்குதாரா்களுக்கு சலுகை விலையில் கூடுதல் பங்கு ஒதுக்கீடு (ரைட்ஸ் இஷ்யு), பணியாளா்களுக்கான பங்கு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளில் இந்த மூலதனத்தைத் திரட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்ற அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com