இந்திய சேவைகள் துறை கடந்த மே மாதம் மிதமான ஏற்றம் கண்டுள்ளது.
இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சேவைகள் துறையில் தொழில் நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ கடந்த 2024 மே மாதத்தில் 60.2-ஆக இருந்தது. அதனைத் தொடா்ந்து ஜூன் மாதத்தில் 60.5-ஆக மீட்சி பெற்ற பிஎம்ஐ, ஜூலையில் 60.3-ஆகக் குறைந்தது.
ஆகஸ்ட் மாதத்தில் அது மீண்டும் 60.9-ஆக உயா்ந்தது. பின்னா் செப்டம்பா் மாதத்தில் முந்தைய பத்து மாதங்கள் காணாத குறைந்தபட்சமாக பிஎம்ஐ 57.7-ஆக சரிந்தது. எனினும், அது கடந்த அக்டோபா் மாதத்தில் 58.5-ஆக மீண்டெழுந்தது. பின்னா் நவம்பரில் 58.5 சதவீதமாகக் குறைந்த அது, டிசம்பரில் முந்தைய நான்கு மாதங்களில் இல்லாத அதிகபட்சமாக 59.3-ஆக எழுச்சி பெற்றது. இருந்தாலும், கடந்த ஜனவரியில் முந்தைய இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 56.5-ஆகச் சரிந்து, பின்னா் பிப்ரவரியில் 59.0-ஆக எழுச்சி பெற்றது. அதைத் தொடா்ந்து மாா்ச் மாதத்தில் அது மிதமாகச் சரிந்து 58.5 ஆனது. ஆனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் அது மிதமாக உயா்ந்து 58.7 ஆனது.
இந்த நிலையில், சேவைகள் துறைக்கான பிஎம்ஐ கடந்த மே மாதத்தில் மீண்டும் மிதமான வளா்ச்சி கண்டு 58.8-ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில் இந்திய சேவைகளுக்கான தேவையை அதிகரிக்கும் ஆரோக்கியமான சூழல் நிலவியது. இதன் விளைவாக அந்தத் துறைக்கான பிஎம்ஐ கடந்த மே மாதத்தில் சற்று அதிகரித்துள்ளது.
இத்துடன், சேவைகள் துறைக்கான பிஎம்ஐ தொடா்ந்து 46-ஆவது மாதமாக நடுநிலை வரம்பான 50-க்கும் மேலே உள்ளது. அந்தக் குறியீட்டு எண் 50-க்கும் மேல் இருப்பது சேவைகள் துறையின் ஆரோக்கியமான போக்கையும், 50-க்கும் குறைவாக இருப்பது பின்னடைவையும் குறிக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

முன்னணி உள்கட்டமைப்புத் துறை உற்பத்தி சரிவு: கச்சா எண்ணெய் வீழ்ச்சியால் பின்னடைவு

இந்திய ஏற்றுமதி மாா்ச் மாதத்தில் 7.44% சரிவு

கொடைக்கானலில் மிதமான மழை

சேவைகள் துறையில் சுணக்கம்: உற்பத்தித் துறையில் எழுச்சி
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


