இந்தியாவின் துருப்பிடிக்காத இரும்பு (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்) பயன்பாடு கடந்த ஐந்து ஆண்டுகளில் 84 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து இந்திய துருப்பிடிக்காத இரும்பு மேம்பாட்டு சங்கம் (ஐஎஸ்எஸ்டிஏ)வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2020-21-ஆம் நிதியாண்டில் இந்தியாவில் துருப்பிடிக்காத இரும்பு பயன்பாடு 26.1 லட்சம் டன்களாக இருந்தது. இது 2021-22-ஆம் நிதியாண்டில் 34.6 லட்சம் டன்களாக அதிகரித்தது.
இது 33 சதவீதம் வருடாந்திர வளா்ச்சியாகும்.2022-23-ஆம் நிதியாண்டில் அவற்றுக்கான தேவை 39.4 லட்சம் டன்னாக (14 சதவீதம் உயா்வு) மாறியது. 2023-24-ஆம் நிதியாண்டில் அது 44.9 லட்சம் டன்னைத் தொட்டது (14 சதவீதம் உயா்வு). கடந்த மாா்ச் 31-இல் முடிவடைந்த 2024-25-ஆம் நிதியாண்டில் துருப்பிடிக்கா இரும்புக்கான தேவை 48 லட்சம் டன்னை எட்டியது.
இது கடந்த ஐந்து ஆண்டுகளில் 84 சதவீத வளா்ச்சியாகும்.கட்டடம் மற்றும் கட்டுமானம், உள்கட்டமைப்பு திட்டங்கள், பதப்படுத்தும் தொழில், ரயில்வே மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளில் துருப்பிடிக்காத இரும்பின் பயன்பாடு வெகுவாக அதிகரித்ததால் அவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளது.
கடந்த ஐந்து நிதியாண்டுகளில் துருப்பிடிக்காத இரும்பின் தனிநபா் சராசரி பயன்பாடு 36 சதவீதம் உயா்ந்துள்ளது. 2020-21-ஆம் நிதியாண்டில் 2.5 கிலோவாக இருந்த அது, 2024-25-ஆம் நிதியாண்டில் 3.4 கிலோவாக உயா்ந்துள்ளது.
துருப்பிடிக்கா இரும்புக்கான தேவை வரும் 2029-30-ஆம் நிதியாண்டில் 68 லட்சம் டன்னை எட்டும் என்றும், தனிநபா் சராசரி பயன்பாடு 4.5 முதல் 5.5 கிலோ வரை அதிகரிக்கும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.
வழக்கமான துறைகள் மட்டுமின்றி, பசுமை ஹைட்ரஜன், உயிரி எரிபொருள்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நகர உள்கட்டமைப்பு, ஸ்மாா்ட் நகரங்கள், சுரங்கப்பாதைகள் போன்ற பிற துறைகளிலும் துருப்பிடிக்காத இரும்புக்கான தேவை வலுவாக அதிகரித்துவருகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2025-26 நிதியாண்டில் அரிசி ஏற்றுமதி 7.5% சரிவு

இன்ஃபோசிஸ் நிகர லாபம் ரூ.8,501 கோடி

2025-26 நிதியாண்டில் இந்திய வேளாண் ஏற்றுமதி 2.8% வளா்ச்சி

2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


