புது தில்லி: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஏப்ரல் மாதம் 19 சதவீதம் உயர்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஏப்ரல் மாதம் நிறுவன வாகனங்களின் மொத்த விற்பனை 84,170-ஆக பதிவாகியுள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 19 சதவீதம் அதிகம்.
மதிப்பீட்டு மாதத்தில் பயணிகள் வாகனங்கள் பிரிவில், நிறுவனத்தின் பயன்பாட்டு வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 28 சதவீதம் உயர்ந்து 52,330-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 41,008-ஆக இருந்தது. கடந்த ஏப்ரலில் நிறுவன வர்த்தக வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 22,989-ஆக உள்ளது.
அந்த மாதத்தில் நிறுவன டிராக்டர்களின் விற்பனை (உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி) 8 சதவீதம் உயர்ந்து 40,054-ஆக உள்ளது. முந்தைய 2024 ஏப்ரல் மாதத்தில் இந்த எண்ணிக்கை 37,039-ஆக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்

இந்திய ஏற்றுமதி மாா்ச் மாதத்தில் 7.44% சரிவு

சமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்பு

மார்ச் மாதத்தில் பஜாஜ் ஆட்டோ விற்பனை 20% உயர்வு!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


