மும்பை: ரியல் எஸ்டேட் நிறுவனமான கோத்ரெஜ் பிராபர்டீஸ் லிமிடெட், பெங்களூருவில் 14 ஏக்கர் அளவில் வீட்டுவசதி திட்டத்தை உருவாக்க நில உரிமையாளருடன் கூட்டு சேர்ந்துள்ளதாக தெரிவித்தது.
கிழக்கு பெங்களூருவின் ஹோஸ்கோட்டில் வர்த்தக ரீதியாக அமைந்துள்ள 14 ஏக்கர் நிலத்தில் பிரீமியம் குடியிருப்பு திட்டத்தை உருவாக்க போவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுமார் 15 லட்சம் சதுர அடி விற்பனை செய்யக்கூடிய பகுதியை இதன் மூலம் பொதுமக்களுக்கு கோத்ரெஜ் வழங்கும். அதே வேளையில் ரூ.1,500 கோடி இதன் மூலம் வருவாய் ஈட்டும்.
இந்த கையகப்படுத்தல் கிழக்கு பெங்களூருவில் நிறுவனத்தின் தொடர்ச்சியான விரிவாக்கத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது என்றது கோத்ரெஜ் பிராபர்டீஸ்.
கோத்ரெஜ் பிராபர்ட்டீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கௌரவ் பாண்டே மேலும் தெரிவித்ததாவது:
கிழக்கு பெங்களூருவில் ஹோஸ்கோட் எங்களுக்கு ஒரு முக்கியமான சந்தையாகும். இங்கு உயர்தர வீட்டுவசதிக்கான வலுவான தேவையை நிறுவனம் தொடர்ந்து நிரூபித்து வருகிறது. மேலும் சிறந்த தரமான குடியிருப்புகளை உருவாக்குவதற்கான எங்கள் தொலைநோக்குப் பார்வை இத்துடன் ஒத்துப்போகிறது.
இந்த மாத தொடக்கத்தில், வீட்டுவசதி திட்டத்தை உருவாக்குவதற்காக கோத்ரெஜ் பிராபர்ட்டீஸ் புணேவில் சுமார் ரூ.800 கோடிக்கு 14 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியதன் மூலம், 37 லட்சம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கக்கூடிய திறன் கொண்ட திட்டத்திலிருந்து ரூ.4,200 கோடி வருவாய் ஈட்டும் என்றது.
இதற்கிடையில், நிறுவனம் கடந்த நிதியாண்டில் சுமார் ரூ.26,500 கோடி வருவாய் திறன் கொண்ட வீட்டுவசதி திட்டங்களை உருவாக்க 14 நிலப் பகுதிகளை வாங்கியுள்ளதாகவும், இது மும்பை பெருநகரப் பகுதி, புணே, புதுதில்லி - என்சிஆர், பெங்களூரு, கொல்கத்தா, அகமதாபாத் மற்றும் இந்தூர் ஆகியவையாகும்.
2024-25 நிதியாண்டில் நிறுவனத்தின் விற்பனை முன்பதிவுகள் 31 சதவிகிதம் உயர்ந்து ரூ.22,527 கோடியிலிருந்து ரூ.29,444 கோடியாக உயர்ந்து.
நிறுவனம் 2024-25 ஆம் ஆண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 93 சதவிகிதம் உயர்ந்து ரூ.1,399.89 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் அது அதன் முந்தைய நிதியாண்டில் ரூ.725.27 கோடியாக இருந்ததாக தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் மொத்த வருமானம் கடந்த நிதியாண்டில் ரூ.6,967.05 கோடியாக அதிகரித்து. இதுவே 2023-24 நிதியாண்டில் ரூ.4,334.22 கோடியாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு

டாடா ஸ்டீல் 4வது காலாண்டு லாபம் இரட்டிப்பு!

ஓலா கேப்ஸ் இழப்பு ரூ. 662.4 கோடியாக அதிகரிப்பு!

4-ஆம் காலாண்டு: நஷ்டத்தில் ஸ்விகி, அா்பன் கம்பெனி!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



