தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

டாலருக்கு நிகரான ரூபாய் 13 காசுகள் சரிந்து ரூ.86.47 ஆக முடிவு!

இன்றைய அந்நிய செலாவணி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ.86.47 ஆக முடிவு.

News image

PTI Graphics

Updated On :18 ஜூன் 2025, 1:16 pm

DIN

மும்பை: இன்றைய அந்நிய செலாவணி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ.86.47 ஆக நிறைவடைந்தது.

பலவீனமான உள்நாட்டு பங்குச் சந்தைகள் மற்றும் டாலரின் வலிமைக்கு மத்தியில், இந்திய ரூபாய் மதிப்பு குறைந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

அதிகரித்த கச்சா எண்ணெய் விலைகள் மற்றும் அந்நிய முதலீட்டாளர்களின் விற்பனை அழுத்தமும் உள்ளூர் சந்தையை வெகுவாக எடைபோட்டது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 86.42 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.86.25 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.86.57 ஐ தொட்ட நிலையில், முடிவில் 30 காசுகள் சரிந்து ரூ.86.34 ஆக முடிந்தது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்திய ரூபாய் 30 காசுகள் குறைந்து டாலருக்கு நிகராக ரூ.86.34 ஆக நிறைவடைந்தது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.