சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி மற்றும் கேலக்ஸி எம்06 5ஜி இந்தியாவில் அறிமுகம்!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்16 5ஜி மற்றும் கேலக்ஸி எம்06 5ஜி ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி மற்றும் கேலக்ஸி எம்06 5ஜி இந்தியாவில் அறிமுகம்!
Published on
Updated on
1 min read

ஹைதராபாத்: சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்16 5ஜி மற்றும் கேலக்ஸி எம்06 5ஜி ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கேலக்ஸி எம் தொடரின் இந்த சமீபத்திய வடிவமைப்புகள், சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் மேம்பட்ட இணைப்புடன் விற்பனைக்கு வருகிறது.

அதி சக்திவாய்ந்த கேமரா

கேலக்ஸி எம்16 5ஜி ஆனது 50 எம்பி பிரதான கேமரா உடன் 5 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா உடன் வருகிறது. தெளிவான செல்ஃபிக்கு 13 எம்பி முன் கேமரா கொண்டுள்ளது.

கேலக்ஸி எம் 06 5ஜி ஆனது 50 எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் உடன் 2 எம்பி டெப்த் கேமரா உடன் வருகிறது. இதில் 8 எம்பி முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

உயர் செயல்திறன் மற்றும் 5ஜி இணைப்பு

  • மீடியாடெக் டைமன்சிட்டி 6300 செயலி மூலம் இயக்கப்படும்.

  • 6.7 இன்ச் டிஸ்பிளே.

  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்.

  • மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்.

  • பிரதான கேமரா - 50 மெகாபிக்சல்

  • முன்பக்க கேமரா - 13 மெகாபிக்சல்

  • 5000 மில்லிஆம்பியர் மணிநேரம் கொண்ட பேட்டரி

  • 5ஜி நெட்வொர்க்

  • கேலக்ஸி எம்06 5ஜி ஆனது 12 5ஜி பேண்டுகளை ஆதரிக்கும்.

நீண்ட கால பேட்டரி மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்

இரண்டு ஸ்மார்ட்போன்களும் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் வேளையில், 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.

கேலக்ஸி எம்16 5ஜி ஸ்மார்ட்போனுக்கான இயங்குதளத்தை மேம்படுத்தல் மற்றும் ஆறு வருட பாதுகாப்பு புதுப்பிப்புகளை சாம்சங் உறுதியளிக்கிறது.

கேலக்ஸி எம்06 5ஜி ஆனது 4 தலைமுறை இயங்குதளம் புதுப்பிப்புகளும் மற்றும் 4 வருட பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும்.

கேலக்ஸி எம்16 5ஜி விலை

4 ஜிபி + 128 ஜிபி – ரூ .11,499 (ரூ .1,000 வங்கி கேஷ்பேக்)

6 ஜிபி + 128 ஜிபி – ரூ .12,999

8 ஜிபி + 128 ஜிபி – ரூ .14,499

கேலக்ஸி எம்06 5ஜி 4 ஜிபி + 128 ஜிபி – ரூ.9,499 (ரூ.500 வங்கி கேஷ்பேக்)

6 ஜிபி + 128 ஜிபி – ரூ .10,999

சாம்சங் ஸ்மார்ட்போன் அசுரத்தனமான செயல்திறன், வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன், கேலக்ஸி எம்16 5ஜி மற்றும் கேலக்ஸி எம்06 5ஜி ஆகியவை இந்திய நுகர்வோருக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்கும்.

இதையும் படிக்க: கோதுமை கொள்முதல்: 31 மில்லியன் டன் இலக்கு நிர்ணயம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com