
இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று (மார்ச் 5) உயர்வுடன் முடிந்தது. கடந்த சில நாள்களாக சரிவுடன் இருந்த நிலையில், இன்று 1 சதவீதம் உயர்வுடன் முடிந்தது.
கடந்த 10 நாள்களாக சரிவுடன் காணப்பட்ட நிஃப்டி இன்று ஆறுதலளிக்கும் விதமாக உயர்ந்துள்ளது.
ஐடி, ஆட்டோ, மெட்டல், பொதுத் துறை, ரியாலிடி துறை பங்குகள் 2 - 4 சதவீதம் வரை ஏற்றத்துடன் காணப்பட்டன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 740.30 புள்ளிகள் உயர்ந்து 73,730.23 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 1.01 சதவீதம் உயர்வாகும்.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 254.65 புள்ளிகள் உயர்ந்து 22,337.30 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 1.15 சதவீதம் உயர்வாகும்.
26 நிறுவனப் பங்குகள் உயர்வு
பங்குச்சந்தை சென்செக்ஸ் 73,005.37 புள்ளிகளுடன் தொடங்கி, பின்னர் 72,894.05 என்ற அளவுக்கு சரிந்தது. பிற்பாதியில் மெல்ல மெல்ல உயர்ந்து 73,933.80 என்ற அதிகபட்சத்தை எட்டியது.
சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 26 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. எஞ்சிய 4 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே சரிவுடன் காணப்பட்டன.
அதிகபட்சமாக அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 5.18% ஏற்றத்துடன் நிலைப்பெற்றன. அதற்கு அடுத்தபடியாக டாடா ஸ்டீல் 4.86%, எம்%எம் 4.34%, பவர் கிரிட் 4.10%, என்டிபிசி 3.97%, டாடா மோட்டார்ஸ் 3.49%, டெக் மஹிந்திரா 3.35%, பார்தி ஏர்டெல் 2.73% உயர்வுடன் காணப்பட்டன.
இதேபோன்று பஜாஜ் ஃபின்சர்வ் -3.35%, இந்தஸ்இந்த் வங்கி -1.60%, எச்டிஎஃப்சி வங்கி -1.17%, சொமாட்டோ -0.26% சரிவுடன் இருந்தன.
10 நாள்களுக்குப் பிறகு உயர்வு
நிஃப்டியைப் பொறுத்தவரை இன்று காலை 22,073 புள்ளிகளுடன் தொடங்கியது. காலை முதலே ஏறுமுகத்தில் இருந்ததால் 22,394.90 என்ற (இன்றைய) உச்சத்தை எட்டியது. வணிக நேர முடிவில் 254 புள்ளிகள் சரிந்து 22,337 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது.
நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் கிராஃப்ட்ஸ்மேன் ஆட்டோ, ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸ், அதானி கிரீன், அதானி டிரான்ஸ்மிசன், கோஃபோர்க், ஏபிபி பவர், அதானி கேஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.
கடந்த 10 நாள்களாக சரிவுடன் இருந்த நிஃப்டி இன்று 1% உயர்வுடன் முடிந்துள்ளது.
தேசிய பங்குச் சந்தையின் சிறு, குறு நிறுவனங்கள் மற்றும் இடைநிலை நிறுவனங்கள் 2% வரை உயர்ந்திருந்தன.
இதையும் படிக்க | தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.