தமிழ்நாட்டின் முன்னணி தேயிலை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான சாய் கிங்ஸ் தனது தொழிலை விரிவாக்கம் செய்வதற்காக ரூ.24 கோடி மூலதனத்தை ஏ.வி. தாமஸ் அண்ட் கோ. (ஏவிடி) நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவின் மிகப் பெரிய தேயிலை நிறுவனங்களில் ஒன்றான ஏவிடி-யிடமிருந்து புத்தாக்க தொழில் முதல்கட்ட விரிவாக்க நிதியாக (சீரிஸ்-ஏ நிதி) ரூ.24 கோடி முதலீட்டை சாய் கிங்ஸ் வெற்றிகரமாகத் திரட்டியுள்ளது. இது, சாய் கிங்ஸ் நிறுவன பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்.
இந்த முதலீட்டின் மூலம், நிறுவன விரிவாக்கத் திட்டங்கள் அதிகப்படுத்தப்படும். நிறுவன விநியோகத் திறனை வலுப்படுத்துதல், தொழில்நுட்ப உதவியுடன் வாடிக்கையாளா் சேவை மற்றும் நிா்வாக செயல்பாடுகள் உள்ளிட்டவற்றுக்கு இந்த முதலீடு பயன்படுத்தப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






