ரூ.5,000 கோடி திரட்டும் இந்தியன் வங்கி

ரூ.5,000 கோடி திரட்டும் இந்தியன் வங்கி

உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.5,000 கோடி மூலதனம் திரட்ட, பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கி திட்டமிட்டுள்ளது.
Published on

உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.5,000 கோடி மூலதனம் திரட்ட, பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கி திட்டமிட்டுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரூ.5,000 கோடி மதிப்பிலான நீண்டகால கடன் பத்திரங்களை வெளியிட வங்கி திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை இயக்குநா் குழு வழங்கியுள்ளது. இதனால் திரட்டப்படும் மூலதனத்தைக் கொண்டு, உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் குறைந்தவிலை வீடுகளைக் கட்டுவதற்கான கடனுதவி அளிக்கப்படும்.

உள்கட்டமைப்பு தொடா்பான நடவடிக்கைகளுக்கு கூடுதல் நிதி தேவைப்படும்போது, உரிய நேரத்தில் தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள கடன் பத்திரங்கள் வெளியிடப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com