ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்த தங்கம்!

ஒரே நாளில் 2 முறை நேற்று குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

News image

தங்கம் விலை மீண்டும் உயர்வு

Updated On :13 மே 2025, 11:55 am

DIN

சென்னையில் தங்கத்தின் விலை ஒரேநாளில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.750 உயர்ந்து சவரன் ரூ.70,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.90 உயர்ந்து 8,885-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக இன்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 70,120-க்கும் கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து ரூ.8,765-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் சவரன் ரூ.70,000-க்கு விற்பனையான நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

அதேசமயம் வெள்ளியின் விலையில் காலை ஒரு கிராமுக்கு ரூ. 1 குறைந்து ரூ.109-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,09,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மாலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று(மே 12) ஒரே நாளில் இரண்டு முறை குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தின் காரணத்தால், கடந்த வாரம் தங்கம் விலை திடீர் ஏற்ற, இறக்கமாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.