ஷாவ்மிக்கு போட்டியாக விவோவின் புதிய ஸ்மார்ட்போன்!

ஷாவ்மி 16 ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக விவோ எக்ஸ் 300 ப்ரோ மினி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.
விவோ எக்ஸ் 300 ப்ரோ மினி
விவோ எக்ஸ் 300 ப்ரோ மினி படம் / நன்றி - விவோ
Published on
Updated on
1 min read

ஷாவ்மி 16 ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக விவோ நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய எக்ஸ் 300 ப்ரோ மினி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.

ஷாவ்மி 16 ஸ்மார்ட்போனில் 6,800mAh பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், விவோ எக்ஸ் 300 ப்ரோ மினியில் அதற்கு இணையான அல்லது அதைவிட கூடுதலான பேட்டரி திறன் வழங்கப்படவுள்ளது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விவோ, ஷாவ்மி ஆகிய இரு நிறுவனங்களின் தயாரிப்புகளும் இந்திய சந்தையில் நம்பகத்தன்மை வாய்ந்த இடங்களைப் பெற்றுள்ளன.

இதனால், சீனாவில் அறிமுகமாகும் எந்தவொரு ஸ்மார்ட்போனும், சில நாள்களில் இந்திய சந்தைக்கும் போட்டிபோட்டுக்கொண்டு அறிமுகப்படுத்தப்படுகின்றன.

அந்தவகையில், அதிக பேட்டரி திறன் கொண்ட ஷாவ்மி 16 ஸ்மார்ட்போன், இந்த ஆண்டு செப்டம்பரில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஷாவ்மிக்கு போட்டியாக விவோ நிறுவனமும் அதிக பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.

நியூ விவோ எக்ஸ் 300 ப்ரோ மினி சிறப்புகள்

இந்த ஸ்மார்ட்போன் முற்றிலும் ஷாவ்மி 16-க்கு போட்டியாகக் கொண்டுவரப்படுகிறது. இதனால், 6,800mAh விட கூடுதலாக பேட்டரி திறன் வழங்கப்படும். இதற்கு முந்தைய (விவோ எக்ஸ் 300 ப்ரோ) மாடலில் 5800 mAh திறன் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. எனினும் இந்தமுறை 100W சார்ஜிங் திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

6.3 அங்குல திரையுடன் சுமூகமாகப் பயன்படுத்தும் வகையில் 120 Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூன்று கேமராக்கள் மற்றொரு கூடுதல் சிறப்பு. அதுவும் மூன்று கேமராக்களுமே 50 MP லென்ஸ்களுடன் வருகின்றன. முன்பக்க செல்ஃபி கேமராவும் 50 MP கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகும்போது 256 GB நினைவகமும் 12 GB உள்நினைவகமும் கொண்ட வேரியன்ட் ரூ. 59,990-க்கு விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க | அதிக பேட்டரியுடன் தயாராகும் ஷாவ்மி 16! இந்தியாவில் எப்போது அறிமுகம்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com