சரிவுடன் நிறைவடைந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 200.15 புள்ளிகள் இழப்பு!

இன்று சுமார் 2525 பங்குகள் உயர்ந்தும் 1312 பங்குகள் சரிந்தும், 134 பங்குகள் மாற்றமில்லாமல் வர்த்தகமானது.
Stock market
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

மும்பை: இந்திய பங்குச் சந்தை குறியீடுகளில் இன்று நிஃப்டி 42.30 புள்ளிகள் சரிந்து 25,019.80 புள்ளிகளாகவும், சென்செக்ஸ் 200.15 புள்ளிகள் குறைந்து 82,330.59 புள்ளிகளாக நிறைவடைந்தது.

முடிவில் சென்செக்ஸ் 0.24 சதவிகிதம் சரிந்து 82,330.59 ஆகவும், நிஃப்டி 0.17 சதவிகிதம் சரிந்து 25,019.80 ஆகவும் இருந்தன. இன்று சுமார் 2525 பங்குகள் உயர்ந்தும் 1312 பங்குகள் சரிந்தும், 134 பங்குகள் மாற்றமில்லாமல் வர்த்தகமானது.

பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.8 சதவிகிதமும், ஸ்மால்கேப் குறியீடு 1 சதவிகிதம் உயர்ந்து முடிந்தன.

துறை வாரியாக மீடியா, மின்சாரம், பொதுத்துறை நிறுவனம், ரியால்டி, மூலதன பொருட்கள் குறியீடுகள் 1 முதல் 1.7 சதவிகிதம் உயர்ந்தன. அதே நேரத்தில் ஐடி குறியீடு கிட்டத்தட்ட 1 சதவிகிதம் சரிந்தது.

நிஃப்டி-யில் பாரத் எலக்ட்ரானிக்ஸ், பஜாஜ் ஆட்டோ, அதானி எண்டர்பிரைசஸ், டாடா கன்ஸ்யூமர், எடர்னல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்த நிலையில் பாரதி ஏர்டெல், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், இன்ஃபோசிஸ், எஸ்பிஐ, எச்.சி.எல் டெக்னாலஜிஸ் ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தன.

சென்செக்ஸ் பட்டியலில் எச்.சி.எல் டெக், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பஜாஜ் ஃபின்சர்வ், லார்சன் & டூப்ரோ, மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் டைட்டன் ஆகியவை சரிந்தும் எடர்னல், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஏசியன் பெயிண்ட்ஸ், ஐடிசி, டாடா மோட்டார்ஸ் மற்றும் என்டிபிசி ஆகியவை உயர்ந்து முடிந்தன.

ஆசிய சந்தைகளில் ஜப்பானின் நிக்கி 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை சரிந்த நிலையில், தென் கொரியாவின் கோஸ்பி சற்று உயர்ந்தது.

அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) பெரும்பாலும் உயர்ந்து முடிந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.09 சதவிகிதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 64.59 அமெரிக்க டாலர்களாக வர்த்தகம் செய்யப்பட்டது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ.5,392.94 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

இதையும் படிக்க: ரயில் விகாஸ் நிகாம் பங்குகள் 11% உயர்வு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com