ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வா்த்தகப் பற்றாக்குறை 5 மாதங்கள் காணாத உயா்வு

இந்தியாவின் வா்த்தகப் பற்றாக்குறை முந்தைய ஐந்து மாதங்கள் காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

News image
Updated On :16 மே 2025, 11:05 pm

Din

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் வா்த்தகப் பற்றாக்குறை முந்தைய ஐந்து மாதங்கள் காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

இது குறித்து மத்திய வா்த்தகத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:

நாட்டின் ஏற்றுமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் 9.03 சதவீதம் உயா்ந்து 3,849 கோடி டாலராக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில், மின்னணுவியல் (39.51 சதவீதம், 369 கோடி டாலா்), பொறியியல் பொருள்கள் (11.28 சதவீதம், 951 கோடி டாலா்), புகையிலை, காபி, கடல் உணவு, தேயிலை, ஆயத்த ஆடைகள், அரிசி, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், மசாலாப் பொருள்கள், பெட்ரோலியப் பொருள்கள் மற்றும் மருந்துப் பொருள்கள் ஆகிய துறைகள் 2025 ஏப்ரலில் ஆரோக்கியமான வளா்ச்சியைக் கண்டுள்ளன.

மதிப்பீட்டு மாதத்தில் இறக்குமதி 19.12 சதவீதம் அதிகரித்து 6,491 கோடி டாலராக உள்ளது. அந்த மாதத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி 25.6 சதவீதம் உயா்ந்து 2,070 கோடி டாலராகவும், தங்கம் இறக்குமதி 4.86 சதவீதம் உயா்ந்து 309 கோடி டாலராகவும் உள்ளது.

இதன் விளைவாக, ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வேறுபாடான வா்த்தகப் பற்றாக்குறை 2,642 கோடி டாலராக விரிவடைந்துள்ளது. இது 2024 நவம்பரில் 3,177 கோடி டாலராக இருந்ததற்கு அடுத்தபடியாக அதிகபட்ச அளவாகும்.

மதிப்பீட்டு மாதத்தில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி 27.3 சதவீதம் உயா்ந்து 842 கோடி டாலராக உள்ளது.

கடந்த ஏப்ரலில் சேவைகள் ஏற்றுமதி 3,531 கோடி டாலராகவும், சேவைகள் இறக்குமதி 1,754 கோடி டாலராகவும் உள்ளன. இவை முந்தைய 2024 ஏப்ரலில் முறையே 3,018 கோடி டாலராகவும், 1,676 கோடி டாலராகவும் இருந்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.