

பங்குச் சந்தைகள் இன்று(புதன்கிழமை) ஏற்றத்தில் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 84,238.86 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.40 மணியளவில் சென்செக்ஸ் 660.34 புள்ளிகள் அதிகரித்து 84,531.66 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 194.30 புள்ளிகள் உயர்ந்து 25,889.25 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
நிஃப்டியில் டெக் மஹிந்திரா, அதானி எண்டர்பிரைசஸ், டிசிஎஸ், ஓஎன்ஜிசி, எடர்னல் ஆகியவை அதிக லாபத்தைப் பெற்றன.
அதே நேரத்தில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டிஎம்பிவி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், மாருதி சுசுகி உள்ளிட்டவை சரிவில் வர்த்தகமாகி வருகின்றன.
பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.3%, ஸ்மால்கேப் குறியீடு 0.6% உயர்ந்துள்ளது.
அனைத்துத் துறை குறியீடுகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. ஐடி, எண்ணெய் & எரிவாயு தலா 1 சதவீதம் உயர்ந்துள்ளன.
இந்த வாரத்தில் 3-வது நாளும் பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
நேற்று(செவ்வாய்) காலை சரிவைச் சந்தித்த பங்குச்சந்தை வர்த்தக நேர இறுதியில் உயர்வுடன் நிறைவுபெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.