எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

இந்திய ஏற்றுமதி 12% சரிவு

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த அக்டோபரில் 11.8 சதவீதம் சரிந்துள்ளது.

News image
Updated On :17 நவம்பர் 2025, 9:45 pm

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: இந்தியாவின் ஏற்றுமதி கடந்த அக்டோபரில் 11.8 சதவீதம் சரிந்துள்ளது.

இது குறித்து வர்த்தகத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:

நாட்டின் ஏற்றுமதி கடந்த அக்டோபர் மாதம் 3,438 கோடி டாலராக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 11.8 சதவீதம் குறைவு.

மதிப்பீட்டுக் காலாண்டில் இந்தியாவின் இறக்குமதி 16.63 சதவீதம் உயர்ந்து 7606 கோடி டாலராக உள்ளது. அந்த மாதத்தில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 4168 கோடி டாலராக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி அதிகரித்ததால் இறக்குமதி உயர்ந்தது.

கடந்த அக்டோபரில் தங்கம் இறக்குமதி 1,472 கோடி டாலராக உயர்ந்தது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் இது 492 கோடி டாலராக இருந்தது. அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 690 கோடி டாலரிலிருந்து 630 கோடி டாலராகக் குறைந்தது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபர் காலகட்டத்தில் ஏற்றுமதி 0.63 சதவீதம் உயர்ந்து 25,425 கோடி டாலராக உள்ளது. இறக்குமதி 6.37 சதவீதம் உயர்ந்து 45,108 கோடி டாலராக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.