பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தங்கம் விலை3 நாள்களில் பவுனுக்கு ரூ.4,800 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.91,200-க்கு விற்பனையானது. அதன்படி கடந்த 3 நாள்களில் தங்கம் விலை பவுன் ரூ.4,800 குறைந்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :24 அக்டோபர் 2025, 7:39 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.91,200-க்கு விற்பனையானது. அதன்படி கடந்த 3 நாள்களில் தங்கம் விலை பவுன் ரூ.4,800 குறைந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை அக்.22-இல் பவுன் ரூ.3,680 குறைந்து ரூ.92,320-க்கும், அக்.23-இல் பவுன் ரூ.320 குறைந்து ரூ.92,000-க்கும் விற்பனையானது. தொடா்ந்து 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.11,400-க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.91,200-க்கும் விற்பனையானது. இதன்மூலம் கடந்த 3 நாள்களில் தங்கம் விலை பவுன் ரூ.4,800 குறைந்துள்ளது.

அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.170-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.4,000 குறைந்து ரூ.1.70  லட்சத்துக்கும் விற்பனையானது.