தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவு! இன்றைய நிலவரம்!
தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம் பற்றி...


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை காலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த அக். 17 ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 97,600-க்கு விற்பனையானது.
தீபாவளிப் பண்டிகைக்கு பின், ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் குறையத் தொடங்கியது. கடந்த வார இறுதியில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 92,000 -க்கு விற்பனையானது.
வாரத்தின் முதல் நாளான நேற்று ஒரு சவரனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 91,600 -க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 1,200 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 11,300-க்கும், ஒரு சவரன் ரூ. 90,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளியின் விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ. 5 குறைந்து, ஒரு கிராம் ரூ. 165-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...