மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

ஹோண்டா காருக்கு ரூ. 1.8 லட்சம் தள்ளுபடி! கோடை சலுகை என்னென்ன?

ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ், சிட்டி, எலிவேட் கார்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கோடைகால சலுகைகள் குறித்து....

News image

ஹோண்டா அமேஸ் - படம் / நன்றி - ஹோண்டா

Updated On :8 ஏப்ரல் 2026, 5:13 pm IST

ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ், சிட்டி, எலிவேட் ஆகிய கார்களுக்கு கோடை கால சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹோண்டா நிறுவனம் இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான கார்களைத் தயாரித்து வருகிறது. இதனால், இந்திய சந்தையில் தனக்கென தனி அடையாளத்தை ஹோண்டா பெற்றுள்ளது.

தற்போது கோடை காலத்தையொட்டி ஏப்ரல் மாதத்திற்கான சலுகைகளை ஹோண்டா அறிவித்துள்ளது. இதன்படி அமேஸ், சிட்டி, எலிவேட் கார்களுக்கு பல்வேறு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஹோண்டா அமேஸ்

ஹோண்டா அமேஸ் காரின் இரண்டாவது தலைமுறை தயாரிப்பு, மற்றும் மூன்றாவது தலைமுறை தயாரிப்புகளுக்கு ஒரே மாதிரியான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இவைகளுக்கு ரூ. 20,000 வரை தள்ளுபடி.

பழைய கார்களுக்கு ரூ. 10,000 வரை பரிமாற்றத் (எக்ஸ்சேஞ்ச்) தள்ளுபடி உள்ளது. ZX காருக்கு ரூ. 15,000 வரை தள்ளுபடியும் உண்டு. 7 ஆண்டுகளுக்கான நீடித்த உத்தரவாதத்தை எந்தவித தொகையும் செலுத்தாமல் பெற்றுக்கொள்ளலாம்.

ஹோண்டா சிட்டி

ஹோண்டா சிட்டி காருக்கு ரூ. 40,000 வரை தள்ளுபடி உள்ளது. இது 5 ஆம் தலைமுறை காருக்கு மட்டுமே பொருந்தும். ஹோண்டா சிட்டி இஷட் எக்ஸ் காரை மாற்றிக்கொண்டு புதிய கார் வாங்குவோருக்கு அதிகபட்சமாக ரூ. 60,000 வரை தள்ளுபடி. 7 ஆண்டுகளுக்கான நீடித்த உத்தரவாதம் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இது ஹோண்டா சிட்டி காருக்கு இதுவரை அறிவிக்கப்படாத சலுகையாகும். இந்த சலுகைகளின் மொத்தத் தொகை ரூ. 1,00,000.

ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் (MY25 மாடல்) காருக்கு சற்று கூடுதலாக 7 ஆண்டுகளுக்கான நீடித்த உத்தரவாதம் உள்பட ரூ. 1,80,000 வரையிலான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் (MY26 மாடல்) காருக்கு ரூ. 35,000 வரையிலான தொகை மற்றும் 7 ஆண்டுகளுக்கான நீடித்த உத்தரவாதம் சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா எலிவேட்

ஹோண்டா எலிவேட் காருக்கு 7 ஆண்டுகளுக்கான உத்தரவாதத்தை எந்தவித கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம். இத்துடன் ரூ. 50,000 தள்ளுபடியும் உண்டு. இத்துடன் பழைய காரை மாற்றினால், அதன் இயக்க நிலைக்கு ஏற்றத் தொகை புதிய காரின் விலையில் இருந்து தள்ளுபடி செய்யப்படும்.

நாட்டின் வெவ்வேறு இடங்களில் உள்ள உள்ளூர் விற்பனையாளர்களுக்கு ஏற்ப இந்த சலுகையில் மாற்றங்கள் இருக்கலாம் என ஹோண்டா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Summary

Honda Car Discounts Of Up To Rs. 1.8 Lakh In April 2026 – Amaze, City, Elevate

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.