பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 93.15! 20 காசுகள் உயர்வு!

இந்திய ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்பு 20 காசுகள் மீண்டு ரூ.93.15ஆக நிறைவு.

News image

இந்திய ரூபாய்

Updated On :15 ஏப்ரல் 2026, 12:49 pm

மும்பை: அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கையின் மத்தியில், கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும், டாலர் பலவீனமடைந்திருப்பதால், இன்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்பு 20 காசுகள் மீண்டு ரூ.93.15 என்ற நிலையில் நிறைவடைந்தன.

ஈரானுடன் 2ஆம் கட்டப் பேச்சுவார்த்தை, அடுத்த இரண்டு நாட்களுக்குள் நடத்தப்படலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதையடுத்து, முதலீட்டாளர்களின் மனநிலை சாதகமாக மாறியது.

மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலுக்கு அமைதியான தீர்வு காண இரு தரப்பினரும் முயற்சியை தொடர்ந்ததையடுத்து, கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி அடைந்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணிச் சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.93.19 என்ற நிலையில் வர்த்தகம் தொடங்கியது. பிறகு வலுவடைந்து, காலை நேர வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூ.93.15 என்ற நிலையில் வர்த்தகமானது. இது அதன் முந்தைய நாள் வர்த்தக முடிவில் இருந்த நிலையை விட 20 காசுகள் அதிகம்.

நேற்றைய முன்தினம் (திங்கள்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 52 காசுகள் சரிந்து ரூ.93.35 என்ற நிலையில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று (செவ்வாய்க்கிழமை) அந்நியச் செலாவணிச் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

Summary

The rupee recovered 20 paise to 93.15 against the US dollar in early trade.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.