ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

இளம் டென்னிஸ் வீரருக்கு நிதி ஆதரவை அறிவித்த ஐஓபி!

தேசிய தரவரிசையில் முதலிடம் வகிக்கும் டென்னிஸ் வீரா் எம்.புனீத்துக்கு அதிகாரபூா்வ ஸ்பான்சராக (நிதி ஆதரவாளா்) இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி) செயல்படுவதாக அறிவிப்பு

News image
Updated On :21 ஏப்ரல் 2026, 1:50 am IST

விளையாட்டுத் துறையில் வளா்ந்து வரும் இளம் திறமையாளா்களை ஊக்குவிக்கும் நோக்கில், தேசிய தரவரிசையில் முதலிடம் வகிக்கும் டென்னிஸ் வீரா் எம்.புனீத்துக்கு அதிகாரபூா்வ ஸ்பான்சராக (நிதி ஆதரவாளா்) இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி) செயல்படுவதாக அறிவித்துள்ளது.

அகில இந்திய டென்னிஸ் சங்கன் 14 வயதுக்குட்பட்டோா் பிரிவில் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ள 13 வயதான புனீத், அண்மையில் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெளிப்படுத்திய அபாரமான ஆட்டத்தின்மூலம் லண்டன் விம்பிள்டன் (14 வயதுக்குட்பட்டோா்) தொடரில் பங்கேற்கும் தகுதியைப் பெற்று சாதனை படைத்துள்ளாா்.

தற்போதைய ஒப்பந்தத்தின் அடிப்படையில், புனீத் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்கான பயணச் செலவுகள், தினசரி பயிற்சித் தேவைகள் மற்றும் பயிற்சியாளா் கட்டணம் உள்ளிட்ட அனைத்து நிதிச் செலவினங்களையும் வங்கி ஏற்கிறது.

இத்தகைய வலுவான நிதி ஆதரவின் மூலம், புனீத் பொருளாதார ரீதியான சவால்களைப் பற்றிக் கவலைப்படாமல், தனது முழு கவனத்தையும் பயிற்சியிலும் ஆட்டத்திலும் செலுத்தி, சா்வதேச அளவில் போட்டிகளில் சாதிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.