மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

4 மணி நேரம் சார்ஜ் செய்தால் 105 கி.மீ. செல்லும் மின்சார சைக்கிள்!

வோட்டோவோல்ட் நிறுவனத்தில் அர்பன் இ-பொபெட் என்ற மின்சார சைக்கிள் அறிமுகமாகியுள்ளது குறித்து...

வோட்டோவோல்ட் அர்பன் இ-பொபெட் - படம் / நன்றி - வோட்டோவோல்ட்

Published On :

வோட்டோவோல்ட் நிறுவனத்தில் அர்பன் இ-பொபெட் என்ற மின்சார (சைக்கிள்) மிதிவண்டி அறிமுகமாகியுள்ளது.

கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு மோட்டோவோல்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மின்சார இருசக்கர வாகனங்கள், மின்சார சைக்கிள்களை உற்பத்தி செய்துவரும் இந்த நிறுவனத்தில் புதிதாக அர்பன் இ-பொபெட் என்ற சைக்கிள் அறிமுகமாகியுள்ளது.

பேட்டரியை விருப்பப்பட்டால் சைக்கிளில் வைத்து இயக்கலாம். இல்லையென்றால், பேட்டரியை கழற்றிவிட்டு, வெறும் சைக்கிளாகவும் பயன்படுத்தலாம்.

சைக்கிளில் அதிக தூரம் பயணிப்பவர்களுக்கு இந்த வகை சைக்கிள் பொருத்தமானதாக இருக்கும்.

சிறப்பம்சங்கள்

  • அர்பன் இ-பொபெட் மின்சார சைக்கிளில் 20Ah பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • 250W மின்சார திறனும், 36V திறனுடைய மோட்டரும் உடையது.

  • 4 - 5 மணி நேரம் பேட்டரியை சார்ஜ் செய்ய வேண்டும். 105 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம்.

  • பிஐஎஸ் தரச் சான்று பெற்ற பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. நீர்ப்புகாத்தன்மை மற்றும் தீப்பிடிக்காத வகையில் பேட்டரி தயாரிக்கப்பட்டுள்ளது.

  • 12,000 கி.மீ. தூரம் அல்லது 2 ஆண்டுகளுக்கு பேட்டரி உத்தரவாதம் கொடுக்கப்படுகிறது. இதனை 30,000 கி.மீ. தூரம் அல்லது 3 ஆண்டுகளுக்கு கூடுதல் தொகை கொடுத்து நீட்டித்துக்கொள்ளலாம்.

  • பேட்டரியை தனியாக கழற்றி வேண்டிய இடத்தில் வைத்து சார்ஜ் செய்துகொள்ளலாம்.

  • முன்புறமும், பின்புறமும் ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமூகமான பயணத்தை உறுதி செய்ய முடியும்.

  • பின்புறம், முன்புறம் விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

  • பேட்டரியை இயக்குவதற்கு தனியாக சாவியும் கொடுக்கப்பட்டுள்ளது.

  • இதன் அறிமுக விலை ரூ. 54,999. அமேசான் இணைய விற்பனை தளத்தில் சலுகையுடன் ரூ. 46,999-க்கு கிடைக்கிறது.

Summary

Motovolt URBN E-Moped Removable Battery - 20Ah Lithium-ion

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.