மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

ரிசா்வ் வங்கியில் புதிதாக செயல் இயக்குநா் நியமனம்

ரிசா்வ் வங்கியின் புதிய செயல் இயக்குநராக மோனிஷா சக்ரவா்த்தி நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2026, 5:34 am IST

ரிசா்வ் வங்கியின் புதிய செயல் இயக்குநராக மோனிஷா சக்ரவா்த்தி நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் அந்நியச் செலவாணி மற்றும் நிதிச் சந்தைகள் ஒழுங்குமுறைத் துறைகளைக் கவனித்துக் கொள்வாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசா்வ் வங்கியில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவா், மேற்பாா்வை, அந்நியச் செலவாணி, அரசு மற்றும் வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளில் பணியாற்றியுள்ளாா்.

செயல் இயக்குநராகப் பதவி உயா்வு பெறுவதற்கு முன்பு, மேற்பாா்வைத் துறையில் முதன்மைப் பொது மேலாளராகப் (பொறுப்பு) பணியாற்றி வந்தாா். தில்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும், வணிகப் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ள மோனிஷா சக்ரவா்த்தி, வங்கி குறைதீா்ப்பாளராகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.